Thursday, January 15, 2015

தெரிந்தவர் சொல்லுங்கள்!

தெரிந்தவர் சொல்லுங்கள்!
இதுவரை யாரும் மகாபாரதத்தை எரித்திருக்கிறார்களா?
தினமும் மகாபாரதம் பாராயணம் செய்பவர்களுக்கு தெரிந்திருக்கலாம்!
ஒரு பெண்ணின் கணவர் தரும காரியங்களுக்காக பரதேசம் சென்றால் எட்டு ஆண்டுகளும் கல்வி புகழுக்காக சென்றிருந்தால் ஆறு ஆண்டுகளும் பொருள் ஈட்ட சென்றிருந்தால் மூன்றாண்டுகள் காலம் வரை பொறுத்திருந்து நியோகம் கொண்டு குழந்தைகள் பெறலாம்.
கணவர் வந்த பின்னர் நியோக பதியை விலக்கி வைக்க வேண்டும்.
அதே போன்று கணவனுக்கும் நியோகம் கொள்ள சில வரைமுறைகள் உண்டு.
மனைவி குழந்தைப் பேறுக்கு தகுதியில்லாமல் இருந்தால் எட்டாண்டுகள் கழித்தும், பிறந்த குழந்தைகள் எல்லாம் இறந்து போனால் பத்தாண்டுகள் கழித்தும் பெண் குழந்தைகளே பெற்றால் பதினோறாண்டுகள் கழித்தும் மற்றொரு பெண் மூலம் நியோகம் கொண்டு பிள்ளை பெறலாம்.
கணவன் நோயாளியாக இருந்தாலும் நியோகம் கொண்டு பிள்ளை பெறலாம்.
மகாபாரதம் இப்படித்தான் சொல்கிறது.
PG சரவணன்

No comments:

Post a Comment